கால சக்கரம் கருணை காட்டாது

மக்கள் எழுச்சியால் சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்ஜங்கள்கூட சரிந்துள்ளன. கால சக்கரம் என்பது அநீதி இழைப்பவர்களுக்கு கருணை காட்டாது. தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் விரைவில் கவிழும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. சூளுரைத்தார்.