கியூபாவைத் தாக்கிய ஈட்டா புயல்

வலுவடைந்து வருகின்ற பருவகால மழைப் புயலான ஈட்டாவானது நேற்று கியூபாவைத் தாக்கியதுடன், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் முனையை நோக்கி நகருகிறது. இப்புயலால் பலர் உயிரிழந்ததுடன், மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை கடந்த வாரம் பெரும் சூறாவளியாகத் தாக்கிய நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.