கிழக்கின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு அவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் பல்​வேறு பகுதிகளில் இன்றும்(08) ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷீறா மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

ஹிஜ்ரா சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது சம்மாந்துறை பிரதேச செயலகம் வரை சென்று அங்கு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் மகஜர்கள் பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மட் ஹனீபாவிடம் கையளிக்கப்பட்டன. இதேவேளை வாழைச்சேனை , மூதூர் மீறாவோடை ,தோப்பூர் ஆகிய பகுதிகளிலும் இன்று பிற்பகல்ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.