கிழக்கு மாகாண தாண்டியடி கிராமத்தில் நெசவு நிலையம்

கிழக்கு மாகாண கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் அனுசரனையுடன், திருக்கோவில் பிரதேச செயலகத்துடன் இணைந்த அம்பாறை மாவட்ட கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் பிரதேசத்தின் தாண்டியடி கிராமத்தில் கைத்தறி நெசவு நிலையம், நேற்று (17) மாலை திறந்து வைக்கப்பட்டது.