குறிஞ்சாக்கேணி – கிண்ணியா பஸ் சேவை ஆரம்பம்

குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவுக்கு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான இலவச பஸ் சேவை, இன்று (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறிஞ்சாக்கேணி பால புனரமைப்பு வேலைகள் நிறைவடையும்வரை இந்த பஸ் சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கவுள்ளது.