கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரனின்

நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனுமற்ற இந்த கூட்டணி பிருகிருதிகள் பற்றி நூற்றுக்கனக்கான சம்பவங்களில் சாம்பிலுக்கு தனிப்பட்ட அனுபவத்தினூடான சம்பவமொன்றையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகவிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு இலண்டனிலே ஒரு சந்திப்பொன்றில் கலந்துகொன்ட தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதியான சுரேஷ் பிரேமசந்திரனுடனான கலந்துரையாடலின் போது அக்கால கட்டத்தில் கொழும்பில் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக கூட்டமைப்பு சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேனும் ஏன் ஒரு அனுதாபமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்று நான் கேட்டபோது சுரேஸ் பிரேமசந்திரன் தமது கட்சித்த்லைவர் (சம்பந்தன்) வெளிநாடொன்றில் இருப்பதாகவும் அவர் திரும்பியதும் அது பற்றி தீர்மாணிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வளவுதான் “நேர்மையும் உண்மையும்” கொண்ட சம்பந்தனோ அவரின் சகபாடிகளோ இன்று வரை அதுபற்றி வாயே திறக்கவில்லை. ஏனெனில் எப்பொதுமே புலிகள் செய்தால் அதற்கு காரனம் காண்பதில் சமர்த்தர்கள் இவர்கள். இப்போதான் சற்று மெதுவாக வாயை திறந்து பிள்ளயை நொந்து கொள்வதுபோல் புலிகளை அன்புடன் கண்டிக்கிறார்கள். ஆனால் எங்கள் முதுகு மீது இனிச் சவாரி செய்யமுடியாது, ஆனால் ஹக்கீம் வகையறாக்கள் உங்களுக்கு அந்த வாய்ப்பை தரலாம். இப்பொதெல்லாம் எதிர் கூட்டணிக்கு எதிர்ப்பதை தவிர வேறு சமாச்சாரமே இல்லை