கேரளாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

ஜூன் 12,13 ஆம் திகதிகளில் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். அத்தியாவசிய கடைகள், சிறு தொழில்களுக்கான மூலப்பொருட்கள் விற்கும் கடைகள், கட்டுமான பொருள் கடைகள் வழக்கம்போல் செயல்படும். வங்கிகள் திங்கள்,புதன், வெள்ளி கிழமைகளில் செயல்படும்.

மளிகைக் கடைகள், நகை, செருப்பு, ஜவுளி, கண்ணாடி கடைகள் ஜூன் 11 ஆம் திகதி மட்டும் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை செயல்படும். அரசாங்கம் சார்ந்த நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் ஜூன் 17 ஆம் திகதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.