கொழும்பில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 206 பேர் கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹாவில் 97 பேரும், களுத்துறையில் 81 பேரும் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 11 மாவட்டங்களில் இருந்தும் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,248 ஆக அதிகரித்துள்ளது.