கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக ரோஸி?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக நியமனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்தின் துணைத்தலைவியாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப்பேச்சாளராகவும் கடமையாற்றி வரும் இவர், ஏ.ஜே.எம். முஸமில்லுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் மேயராக இருந்த முஸமில், மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆனால், முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.