கோட்டா வீட்டின் முன் படை குவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி அரகலய போராட்ட காரர்களால் இன்றும் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்திலேயே மேலதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.