சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணித்த 17 பேர் கைது

குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 17 இலங்கையர்களை, மட்டக்களப்பு வடக்குக் கடற்பிராந்தியத்தில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை (15) கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.