‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’

‘இலங்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையிலுள்ள அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர்” என்று, முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தினால் (IPU) நடத்தப்பட்ட புதிய சாதனை எனும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், “தேவையற்ற அழுத்தங்களை, சிலர் என்மீதும் திணித்தனர். காதலை வளர்த்துக்கொள்ளல், அவர்களுடைய அலுவலகங்களுக்கு அழைத்துக்கொள்ளல், உதவிகளைச் செய்தல், வெளிநாடுகளுக்கு கூடவே அழைத்துச் செல்லல்,
வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னரும், அழைப்புகளை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு அழுத்தங்களை நான் எதிர்கொண்டேன்” என்று, அவர் இதன்போது தெரிவித்தார்.

“எவ்வாறாயினும், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்தாலும், தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.