சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளம் எதிர்ப்பு

தேயிலை மற்றும் இறப்பர் துறைகளில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 சதவீதத்தில் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பு- ரேணுகா ஹோட்டலில்  திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, முதலாளிமார் சம்மேளன பிரதிநிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.