சிறுத்தை குரங்கு பன்றிகளின் அட்டகாசம் யாழ் குடா நாட்டில்

கொடிகாமம். வறணி. மந்துவில் மற்றும் கிராமங்களில் குரங்குகள் மாங்காய்கள், வாழைக்குலைகள். ஏனையவைகளை அழித்து வருகின்றன.

பன்றிகள் அளவெட்டி வயல்பகுதிகள்வரை தமது பிராந்தியத்தினை விஸ்தரித்துள்ளன.

அண்மையில் சிறு குரங்குக் கூட்டங்கள் வலி வடக்கில் (மல்லாகம், தெல்லிப்பழை, மயிலிட்டி) மூன்று கிராமங்களில் குழந்தையையும், சிறுவர்களையும் கடித்தும், விரான்டியும் தாக்கியுள்ளன. அவர்ககள் தெல்லிப்பழை அரசினர் வைத்தியசாலையில் பல நாட்கள் வைத்தியம் பெற்றனர்.

சில குரங்குச்சிறு கூட்டங்கள் சங்குவேலி, உடுவில் பகுதியில் சென்றமாதம் திரிந்தன. இதனால். பீதியடைந்து, தாய் – தற்தையர்கள் பிள்ளைகளை வீட்டினுள் வைத்துப் பூட்டும் நிலை காணப்பட்டது.

இவைகள் தொடர்பாக எவர்களுக்கு முறைப்பாடுகள் செய்யப்படவேண்டும் என்ற விளககம் சாதாரண மக்களுக்கு இல்லாததால், எதுவும் நடைபெறவில்லை.

இவை தொடர்பாக பெலீசாருக்கும், கிளிநொச்சியில் அமைந்துள்ள வனவிலங்கு பரிபாலன திணைக்களத்திற்கும் எழுத்துமூலம் முறைப்பாடுகளைச் செய்தல் வேண்டும். முறைப்பாடுகளை பதிவுத் தபாலில் அனுப்பினால்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இல்லாதபோனால், அப்படி யொரு முறைப்பாடு செய்யப்பட்டது என்பதற்கே ஆதாரம் இருக்கமாட்டாது.

ஆகவே 50 ரூபாய் செலவழிந்துவிடும் எனப் பணக் கணக்கைப் பார்க்காது, பதிவுத் தபாலில் முறைப்பாட்டினைச் செய்யவும்.

ஒரேயொரு பிரச்சினை அந்தத் திணைக் களத்தில் வேலை பார்க்கபவர்களுக்குத் தமிழ் தொியுமா என்பது தெரியவில்லை!

குழந்தை, சிறுவர்களைக் குரங்குகள் கடித்தது தொடர்பாக விசாரணைக்கு வந்த எவருக்கும் தமிழ் பேசத் தெரியாது என சிலர் தெரிவித்திருந்தனர்!!

இதற்கு தமிழர்கள் தெரிவுசெய்யும் எம். பீக்களிடம்தான் விடையைப் பெறவேண்டும்.

ஆனால், தேர்தலில் முன்னரைப்போலத்தானே வாக்களிக்க உள்ளீர்கள் மக்காள்!!

இவைகளைத் தவிர, ஒரு சில வருடங்களாக திடீரென A9 முறி கண்டிக் கோயில் பகுதிக்கு அப்பால் கூட்டம் கூட்டமாக யானைகள் றோட்டைக் கடக்கும் நிலை உருவாகியுள்ளது.

இப்படிப் பெருமெண்ணிக்கையான யானைகள் இப்பகுதிக்கு எப்படி வந்தன என்பதையும் நாம் தமிழ் எம். பீக்களிடமிருந்துதான் அறியவேண்டும்.

Department Of Wildlife Conservation (kilinochchi Regional Office)
Address: Kandy-Jaffna Hwy
Hours:
Open 24 hours
Phone: 0212 285 046

Leopard kills six goats in shed
Thursday, July 9, 2020 – 01:00
Print Edition
Local
Rasula Dilhara Gamage Northern Province Special Corr.

A leopard has killed six goats and injured 13 others in a shed in Maveikalatti, Jaffna, on Tuesday. The owner of the shed had managed to chase it away by lighting firecrackers.

Villagers in the area fear that the wild animal would return to harm more of their livestock, and event them. They have requested the authorities to capture the leopard and release it to the wild.

http://www.dailynews.lk/…/2227…/leopard-kills-six-goats-shed