சிலி நாட்டின் இளம் குடியரசுத் தலைவராக கம்யூனிஸ்ட் தலைவர் கேப்ரியல் போரிக்

சாண்டியாகோ: தென்அமெரிக்கா நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இளம் இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக இளம்வயது அதிபர் என்ற பெருமையை போரிக் பெற்றுள்ளார். கேப்ரியல் போரிக், 35 வயதாகும் இவர் தான் சிலி நாட்டின் அதிபர் பதவியை அலங்கரிக்க இருக்கும் இளம் கம்யூனிஸ்ட் தலைவர். அதிபர் பதவி புதிது என்ற போதும் கடந்த காலங்களில் சிலி அரசின் முடிவுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டக்களங்களில் கேப்ரியல் போரிக் மிகவும் பிரபலம்.