சீனாவில் மூன்றாவது நகரத்தையும் முடக்கியது கொரோனா

சீனாவின் நகரங்களான லான்ஸோ, மங்கோலிய பிராந்தியத்தின் ஏஜின் ஆகிய நகரங்கள் ஏற்கனவே கொரோனா வைரஸால் முடக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இன்று சீனாவின் ஹெயிலோக்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹெய்ஹே நகரமும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நகரம் ரஷ்யாவுடன் எல்லையை பகிர்கிறது. 

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றும், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.