சுமந்திரனின் பேச்சாளர் பதவி பறிக்கப்படுமா? மாவை, செல்வம், சித்தர் யாழில் அவசர ஆலோசனை

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய இரகசிய ஆலோசனையைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.