சுமந்திரன் கொலை முயற்சி: ஐவருக்கும் மறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடித்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று (05) உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.