சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும் இணைத்துக் கொண்டாடி மகிழும்……

“வேரும் விழுதும் 2015” (கலைமாலை)

காலம் : 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி தொடக்கம்..
இடம் : Restaurant Baren sall, Bern str-25, 3072 Ostermundigen.

நிகழ்ச்சிகள்..
இயல், இசை, நாட்டியம், இசைப்பாட்டு, தாளவாத்திய விருந்து, நகைச்சுவை விருந்து, சிறப்புப் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி: “சுவிஸ் ராகம்” இசைக்குழுவின் கரோக்கி இசையில் பண்பட்ட பல கலைஞர்களின் “ராக கீதம்”, அதிரடி மேலைத்தேய நடனங்கள் (Hip Hop -ரி.யு.கே பாய்ஸ், ட்ரீம் பாய்ஸ் உட்பட பலரது..) போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள்…

**ஒன்றிய ஆண்டு விழா மலர் வெளியீடு..

**தலைமையுரை, வாழ்த்துரை, மலர் அறிமுகஉரை, ஒன்றிய உரை, பிரதம விருந்தினர் உரை, நன்றியுரை..

**புங்குடுதீவு வைத்தியசாலைக்கு உதவிய திரு.கனகரெத்தினம் குடும்ப அறிமுகம் மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு..

**”பிரவேசம் இலவசம்”.. அனைவரும் வருக, ஆதரவு தருக.. நன்றி***
-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து-

*** தொடர்புகட்கு….
தொலைபேசி எண் :
079.218 70 75, 079.398 28 19, 078.800 59 51, 076.326 81 10, 077.948 52 14

*******************************************************************************

***முக்கிய குறிப்பு***
நிகழ்ச்சிகள் யாவும் குறிப்பிட்ட நேரத்தில் (இரண்டு மணிக்கு- 14.00) ஆரம்பமாகி, நேரகாலத்துடன் முடிவடைய உள்ளதினால் தயவுசெய்து நிகழ்ச்சி தருவோர் மற்றும் அவர்களுக்கு துணையானோர், பக்கவாத்தியத்தினர் போன்ற அனைவரும் அன்றைய தினம் பகல் 01.00 மணிக்கு முன்பாக மண்டபத்தில் இருந்து எமக்கு பூரண ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

அதேபோல் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகசபை உறுப்பினர்கள், ஆலோசனை சபை உறுப்பினர்கள் உட்பட ஒன்றிய ஈடுபாடு உடைய அனைவரும் 24.10.15 சனிக்கிழமை மாலை 08.00 மணிமுதல் மண்டபத்தில் இருந்து உதவி புரியுமாறும், அதேபோல் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி முதல் இருந்து உதவி புரியுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்… உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

இவ்வண்ணம்..
திரு.த.தங்கராஜா,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து
27.09.2015