சென்னையில் இன்று மாத்திரம் 26 பேர் உயிரிழப்பு

நேற்று மட்டும் தமிழகத்தில் 2532 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் சென்னையில் 1493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 53 நபர்கள் உயிரிழந்தனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கையானது 757 ஆக உயர்ந்தது.இதில் சென்னையில் மட்டும் 601 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.