சென்னையில் தியாகிகள் தினம்.

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் என்று செயற்பட்ட நாங்கள் இந்த வருட ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் நடைபெற்ற பேராளர் மகாநாட்டில் எமது அமைப்பின் பெயர்களை பத்மநாபா மக்கள் முன்னணி என்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்றும் பெயர் மாற்றம் செய்தோம். வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட யதார்தங்களை கருத்தில் கொண்டு எமது மக்களின் விடிவிற்கான அரசியல் பாதையிற்கு தேவைப்படும் மாற்றத்தினை ஏற்படுத்hதியிருந்தோம் இந்த மகாநாட்டில். கடந்த 25 வருடங்களாக சென்னை புழல் முகாமில் தொடர்ந்தும் அகதிளாக வாழும் எமது மக்கள்இ தோழர்கள் வருடா வருடம் நினைவு கூரும் தியாகிகள் தின நிகழ்வும் இம்முறை தோழர் ஸ்ரானிஸ் தலமையில் நடைபெற்றது. தோழர் கல்யாசுந்தரத்தின் நினைவு நாளும் ஜுன் மாதம் 20 ம்திகதி நடைபெறுவதால் அவரின் வழிவந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் இவ்நிகழ்வை இணைந்தே ஒழுங்கு செய்திருந்தனர் வணக்க நிகழ்வுடன் ஆரம்பித் இந்த நிகழ்வு ஈழவிடுதலைக்காவும் மனித குல விடுதலைக்காகவும் தம்மை அர்பணித்த போராளிகள் பொது மக்கள் மாற்று விடுதலை அமைப்பு போராளிகள் யாவருக்குமான ஒரு மரியாதை செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது