டயானா கமகேவின் அதிரடி அறிவிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக உள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே. இவர் இன்று (09) விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் கருத்து தெரிவித்த டயானா, “எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த பாராளுமன்றம் கலைக்கப்படும். எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். ரணில் விக்ரமசிங்க மற்றவர்கள் மறைந்திருந்த போது இந்த நாட்டைக் கைப்பற்றினார். நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன்” என்றார்