தடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்

கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் சினோபாம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளில் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த தடுப்பூசியை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.