தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம்

இதன்போது, யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே சிவாஜிலிங்கம் உட்பட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்களை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது, வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.