‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை பகிஸ்கரிக்காது’

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், “தமிழ்க் காங்கிரஸ், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர். அதனை நாங்கள் ஏற்கமுடியாது. எம்மிடமுள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்கு. அந்த வாக்கைப் பயன்படுத்திதான் நாம் நியாயமான முடிவைப்பெறவேண்டும். பல துன்பியல்களை எதிர்கொண்ட சமூகம் ஒரு நிரந்தர தீர்வை எட்டவேண்டும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை தீர்மானிக்கின்றதோ, அவரைத்தான் வட, கிழக்கின் பெரும்பாலான தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள். இதுதான் உண்மை. அந்த விடயத்தில் இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றது.

“யார் நியாயமான அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்கி, தமிழ் மக்களின் நீண்டகால துன்பத்தைத் தீர்ப்பதற்கான வழியைக் காட்டுவார்களோ அவர்களுக்கு ஆதரவை வழங்குமாறு தமிழ் மக்களைக் கோருவோம்” என்றார்.

RECOMMENDED