தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

இதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலையிலும் அதிமுக கூட்டணி இதற்கு பின்னால் அடுத்த நிலையிலும் இருக்கின்றன. மற்ற கட்சிகள் இதுவரை எந்h ஒரு தொகுதிலும் முன்னிலை வகிக்கவில்லைசில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு தேர்தல் பற்றி வெளியிட்டிருந்த எனது தேர்தல் கணிப்பு அனேகம் சரியாக அமையலாம் என்றே இதுவரை முடிவுகள் தெரிவிக்கின்றன.
1978 களிலிருந்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு காரணங்களுக்காக ஆகக் குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையேனும் சென்று வருகின்றேன். பல தரப்பட்ட அரசியல் பின்னணியை உடையர்வர்கள் எனது நட்பு வட்டாரத்தில் இருக்கின்றனர். எல்லோரும் ஒரு குரலில் கூறும் விடயம் ‘…இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சுத்த மோசம் எங்கே மக்களைப்பற்றி யோசிக்கின்றார்கள் திருடர்கள் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களின் ஓரே நோக்கம்…’ என்று. நான் திருப்பி கேட்பேன் அப்போ ஏன் திரும்ப திரும்ப இவர்களையே தெரிவு செய்கின்றீர்கள் என்று. அவர்களின் பண பலத்திற்கு முன்னால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பார்கள். காமராசர் போன்ற ஒருவர் அல்லது திரிபுரா, கேரளா, மேற்கு வங்கம், போல் இடதுசாரிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பார்கள். ஆனால் கடந்த 40 வருடங்களாக தமிழ்நாட்டு மக்கள் இந்த திராவிடக் கட்சிகளிடம் மட்டுமே சரணடைந்து கிடக்கின்றனர்.

(சாகரன்)