தலையை தூக்கியது டொலர்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 16 நாட்களுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 305.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.28 ரூபாவாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.