திரு பத்மனாதன் மறைவு!

இலங்கையின் நிர்வாகத்துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றியவரும் 1983 வெலிகடை சிறை படுகொலையின் பின்னர் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சிறை தகர்ப்பில் தப்பியவர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு வெலிகடையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் எம்முடன் சக கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான திரு பத்மனாதன் மறைவு. 1987 இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் விடுதலையான திரு பத்மனாதன் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கத்தின் புனர்வாழ்வு புனர் நிர்மாண அமைச்சின் செயலாளராகவும் சந்திரிகா அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சின் உதவி செயலராகவும் பணியாற்றியவர். அன்னாருக்கு எம் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்!