தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்

தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளிகளில் ஒருவரான மந்துவிலைச் சேர்ந்த இரத்தினம் அவர்கள் சக நண்பனான பனியன் ராசன் என்பவனால் நயவஞ்சகமாக எதிரிகளின் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று. 18/02/ 1968 இல் கொல்லப்பட்டார்.1935 ஆம் ஆண்டு பிறந்த அவர் முப்பத்து மூன்றாவது வயதில் கொல்லப்பட்டார். இன்று அவரது ஐம்பதாவது நினைவு தினம்.இலங்கை தமிழர் வாழ்வில் ஓரளவு வெற்றியடைந்து போராட்டம் என்றால் அது தீண்டாமை எதிர்ப்பு போராட்டமே. இதில் இரத்தினத்தின் பங்களிப்பு மகத்தாது மந்துவி சங்கானை மாவிட்டபுரம் அச்சுவேலி கன்பொல்லை என்று பரந்திருந்த போராட்டத்தில் பல்வேறு இடதுசாரிப் போராளிகளின் பங்களிப்பும் மக்களின் ஆதரவும் இணைவும் இந்தப் போராட்டதின் வெற்றகளுக்கு காரணமாக அமைந்தன. எஸ்டி பண்டாரநாயக்கா போன்றவரகள் இந்தப் போராட்திற்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் நேரில் வந்து ஆதரவுதெரிவித்ததும் இங்கு பதிவுசெய்யப்பட வேண்டின. மட்டக்களப்பு கவிஞர் சுபத்திரனின் கவிதைகள் இப்போராட்டத்தின் எழுச்சிக்கு பெரும் துணையாக அமைந்தன. இவற்றின் மத்தியில் ‘சங்கனையில் ஒரு சங்காய்’ என்று இந்தப் போராட்டதை கொச்சைப்படுத்தியவர்களும் அடங்கா தமிழன் என்ற சாதி வெறியர்களையும் தோல் உரித்து காட்டப்படவேண்டியவை.

(Vijay, Saakaran)