தெரிந்த நடிகர் தெரியாத விவசாயி- “வில்லன்” கிஷோர்

தான் சம்பாதிச்ச பணத்தில் பெங்களூர் அருகே நிலம் வாங்கி, தானே கெமிக்கல் உரங்கள் இன்றி இயற்கை விவசாயம் செய்கிறார் நம்ம தமிழ் சினிமா வில்லன் கிஷோர்.விதைக்கிற மற்றும் அறுவடை சீசனில் சினிமா வாய்ப்பு வந்தால் எனக்கு வேறு பட வேலைகள் இருப்பதாகச் சொல்லி சினிமா வாய்ப்பை தள்ளி விட்டு விவசாயம் செய்கிறார்,தன் மனைவி தனக்கு விவசாயத்தில் பேருதவி செய்வதாகச் சொல்கிறார். கம்பு, தினை,சாமை போன்ற சிறு தானியங்கள் பயிடுகிறார் 6 ஏக்கரில் பழமரங்கள் வைத்துள்ளார்.வாழை மட்டும் பயிரிடுவதில்லை,வாழைப் பழங்களின் வாசனைக்கு யானைகள் வந்து பயிர்களை அழித்துவிடுமாம்.கிஷோர் இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் தீவிர ரசிகர். விவசாயத்திற்கு_உயிர்கொடுப்போம்‬. விஷ குளிர்பானத்தை வேரறுப்போம்.