புரட்சியாளர் யாசர் அரபாத் நினைவுதினம் இன்று…

 

பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஒரு வரலாற்று நாயகர்!

அவர் உலகெங்கும் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களின் குறியீடாய் திகழ்பவர்!
அகதிகளாய்த் திரிந்த யூதர்கள் குடியேறிகளாய் புகுந்து; பாலஸ்தீனத்தைப் பிளந்து; இஸ்ரேலை உருவாக்கிய போது உலகமே பதறியது.
அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த தொலைநோக்கு சதிகளில் ஒன்றுதான் இஸ்ரேல் எனும் ‘டெஸ்ட் ட்யூட் பேபி’.
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் நடத்திய யுத்தங்கள் தோல்வியிலேயே முடிந்தன.

சோதனையான அக்காலகட்டத்தில் அரபுகளின் நம்பிக்கை கீற்றாய், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) தோன்றியது. வீரத்தின் விளைநிலத்தில் யாசர் அரபாத் எனும் புரட்சிகரப் போராளி தோன்றினார்.
வல்லரசுகளின் துணை கொண்டு, இஸ்ரேல் எனும் ஆற்றல்மிகு தேசத்தை நடுநடுங்க வைத்தார். தலைமறைவு போராளியாய் வலம் வந்து, கொரில்லா தாக்குதலை அறிமுகப் படுத்தி இஸ்ரேலின் இறுமாப்பைக் குலைத்தார்!

வலிமையான ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேலியர் களின் தலைகளில் இடிகளாய் இறங்கினர் பி.எல்.ஓ. போராளிகள்.
உலகின் தலைசிறந்த உளவுப் படையான ‘மொசாத்’ பாலஸ்தீன விடுதலைப் போராளிகளின் சாகசங்களைக் கண்டு திணறியது. யாசர் அரபாத்தையும், அவரது தளபதிகளையும் கொல்ல முயன்று தோற்றது.
யாசர் அரபாத்தின் எழுச்சியையும், விடுதலை முழக்கத்தையும் உலக நாடுகள் வரவேற்றன. நாடொன்று அமையாமலேயே, உலகின் பல நாடுகளில் தூதரகங்களைத் திறந்தது பி.எல்.ஓ.! உலகின் விடுதலை இயக்கங்கள் யாருக்கும் கிடைக்காத கௌரவம் அது!

ஐ.நா.சபையால் உரையாற்ற அழைக்கப்பட்ட ஒரே விடுதலைப் போராட்டத் தலைவரும் யாசர் அரபாத் மட்டும்தான்!

அமெரிக்கா வழியாகத்தான் ஐ.நா.வுக்கு செல்ல முடியும் என்ற இழிநிலை இன்றும் தொடரும் நிலையில், அன்று அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது.
அவருக்காக வேண்டி ஐ.நா.வின் சிறப்புக் கூட்டம் ஜெனீவாவில் நடத்தப்பட்டது. பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஐ.நா. அவையில் கர்ஜித்தார்.

“ஆலிவ் இலைகளையும், சமாதானப் புறாக்களையும் கைகளில் ஏந்தி வந்துள்ளேன். எங்கள் விடுதலையை மறுக்காதீர்கள்” என அவர் நிகழ்த்திய உரை, உலகை உலுக்கியது. எதிரிகளையும் ஈர்த்தது.
சேகுவாராவைப் போன்றே இவரையும் மேற்குலகின் ஆட்சியாளர்கள் ஏளனம் செய்தனர். ஆனால், ஆசிய&ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டிய விடுதலைப் போராளியாக உலகம் அவரை மதித்தது.

அவரைக் கொலை செய்ய இஸ்ரேலும், அமெரிக்காவும் எடுத்த முயற்சிகளை பாலஸ்தீன உளவு அமைப்பு முறியடித்துக் கொண்டே வந்தது. அதேபோல பல்வேறு விபத்துகளிலிருந்தும் இறையருளால் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார்.
ஒரு சுதந்திர நாட்டின் அதிபருக்குரிய மரியாதையோடு அவரைப் பல நாடுகள் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைகளைக் கேட்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

இந்தியாவின் உற்ற நண்பராகவும், இந்தியாவை நேசித்த தலைவராகவும் இருந்தார். அதனால்தான் சந்திரசேகர் பிரதமராக இருந்தவரை இஸ்ரேலின் தூதரகம் இந்தியாவில் திறக்கப்படாமல் இருந்தது.
அவர் இந்திரா காந்தியுடனும், ராஜீவ் காந்தியுடனும் நெருங்கிய நண்பராக இருந்தார். ராஜீவைப் படுகொலை செய்ய சதி நடப்பதாக பி.எல்.ஓ.வின் உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததும், அதை ராஜீவுக்கு தெரியப்படுத்தினார்.
ராஜீவ் கொல்லப்பட்ட போது, கண்ணீரோடு டெல்லிக்கு ஓடோடி வந்தார் யாசர் அரபாத்!

உலக விடுதலை இயக்கங்கள் யாசர் அரபாத்தை முன்னோடி தலைவராக ஏற்றுக் கொண்டனர். தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் போராளிகள் பி.எல்.ஓ.விடம் பயிற்சிப் பெற்றது ஒரு முக்கிய நிகழ்வாகும்!

யாசர் அரபாத் ஒரு பொறியாளர். ஒரு பொறியாளருக்கே உரிய நுட்பங்கள் அவரிடம் நிறைந்திருந்தன.
அவர் ஒரு கொரில்லா படையை வழிநடத்தியவராக மட்டுமின்றி, ஒரு ராணுவ நிபுணராகவும் செயல்பட்டார். அதுதான் பி.எல்.ஓ.வின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது.
எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் அவர் ஒரு அரசியல் நெறியாளராகவும், பன்முக சமூகங்களை அரவணைக்கும் ஆற்றல் நிரம்பியராகவும் திகழ்ந்தார்.

யூதர்களை எதிர்க்க கிருஸ்தவர்களுடன் நல்லிணக்கம் பேணுவதன் அவசியத்தை உணர்ந்தார். பாலஸ்தீன அரபு கிறித்தவர்கள் ஏற்பாடு செய்யும் கிறிஸ்துமஸ் விருந்திலும் பங்கேற்றார். வழிபாடு வேறு, நேசம் வேறு என்பதை பக்குவமாக வெளிப்படுத்தினார்.
அவருக்கு பக்கபலமாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறிய பிறகு, உலகில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை உள்வாங்கினார்.
இனி நெடுங்காலத்திற்கு அமெரிக்காதான் உலகின் ஒற்றை வல்லரசாக கோலோச்சும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயலாற்றினார்.

அமெரிக்க அதிபராக கிளிண்டன் செயல்பட்ட போது பாலஸ்தீன&இஸ்ரேல் பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வு காண முயன்றார். மேற்கு கரையையும், காஸாவையும் உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.
‘இஸ்ரேலை ஒழிப்பதே ஒரே நோக்கம்’ என்ற பிடிவாத நிலையில் இருந்த அரபு நாடுகளும், அரபுகளும் இதை ஏற்கத் தயங்கினர். இஸ்ரேலியர்களை வரலாற்று எதிரியாக பாவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் முழு உடன்பாடில்லை.

யாசர் அரபாத் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டார்! இஸ்ரேலை ஒழிக்கும் அளவுக்கு படைபலமோ, ஆயுத பலமோ அரபு நாடுகளில் யாருக்கும் இல்லை. அவர்கள் யாரும் போரிடவும் தயாராக இல்லை. அவர்கள் நன்கொடையாளர்கள் மட்டுமே!