தெறி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்ததா? ஒரு பார்வை

தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியாகியுள்ளது. விஜய்-அட்லீ முதன் முறையாக இணையும் படம் என்பதை தாண்டி ஜி.வி.பிரகாஷிற்கு இது 50வது படமும் கூட. இதனாலேயே இப்படத்தின் பாடல்கள் மீது எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.

ஜித்து ஜில்லாடி

உலக தர லோக்கல் என முன்பே கூறியிருந்த பாடல் ஜித்து ஜில்லாடி, கானா புகழ் தேவாவின் குரலில் ’போற வர பொண்ணுங்கள தொட்ட, உன் கைய உடைச்சு போட்ருவா புத்தூரு கட்டு’ என கலக்கல் வரிகளில் செம்ம ஃபோக் சாங்காக வந்துள்ளது. ஆனால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த பாடல் கவரவில்லை என கூறப்படுகின்றது.

ஈனா மீனா டீகா

என்னை அறிந்தால் அஜித்திற்கு உனக்கென்ன வேனும் சொல்லு பாடல் டைப் தான் இந்த ஈன மீனா டீகா, ஆனால், அதில் எமோஷ்னல் ட்ரவலாக இருக்க இதில் விஜய்-நைனிகாவின் அப்பா-மகள் உறவை குறும்பாக கூறும் வரிகளாக அமைந்துள்ளது. அதிலும் உத்ரா உன்னிகிருஷ்ணன் குரல் ரிப்பிட் மோட் தான்.

என் ஜீவன்

ஜி.வி. என்றாலே எப்போதும் மெலடிக்கு தான் பேர் போனவர், அதிலும் இவரும் காதல் மனைவி சைந்தவியும் இணைந்து பாடினாலே சூப்பர் ஹிட் தான். ஆனால், இந்த முறை சைந்தவியுடன் ஹரிஹரன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல் விஜய் மற்றும் சமந்தாவிற்குமான டூயட்டாக அமைந்துள்ளது. காதலர்களுக்கான பேவரட்.

செல்லக்குட்டி

விஜய் சமீப காலமாக தன் படத்தில் கண்டிப்பாக ஒரு பாடலை பாடிவிடுகிறார். அந்த லிஸ்டில் வந்துள்ளது தான் செல்லக்குட்டி, இந்த பாடல் ஒரு நார்மல் கம்ர்ஷியல் படத்தில் வரும் குத்துப்பாடல் போன்றது தான், விஜய் வாய்ஸ் என்பது மட்டுமே ஸ்பெஷல்.

ரங்கு

டி.ஆர் ஒரு படத்தில் பாடுகிறார் என்றாலே அதிரிபுதிரி தான், அதிலும் விஜய்க்கு பாடுகிறார் என்றால், சும்மாவா???. இந்த பாடல் விஜய், எமி ஜாக்ஸனுக்குமான குத்து பாடலாக அமைந்துள்ளது. டி.ஆர் வழக்கம் போல் செம்ம எனர்ஜியில் இறங்கி பாடியுள்ளார். சி செண்டர் ஆடியன்ஸுக்கான அக்மார்க் பாடல்.

தாய்மை

விஜய் முதன் முறையாக சமந்தாவை பார்க்கும் போது வரும் பாடல் போல் தெரிகின்றது, கிட்டத்தட்ட அலைப்பாயுதேவில் ஷாலினி பாடும் போது மாதவன் பார்ப்பது போல் விஜய் சமந்தாவை சந்திக்கும் இடமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மெலடி ரசிகர்களை மிகவும் கவரும் பாடல்.

மொத்தத்தில் எதிர்ப்பார்த்த ஜித்து ஜில்லாடி, செல்லக்குட்டி பாடல்கள் கொஞ்சம் பின் தங்கினாலும், எதிர்ப்பாரத என் ஜீவன், தாய்மை மற்றும் ஈன மீனா டீசா சர்ப்ரைஸ் விருந்தாக அமைந்துள்ளது.