‘தேர்தலுக்குப் பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி’

இந்திய நாடாளுமன்ற கீழ்ச்சபைக்கான தேர்தலுக்குப் பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியொன்றிலேயே மேற்படி விடயத்தை ப. சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார்.