‘தோட்ட வீடமைப்பு முறையில் திருத்தம்’

பெருந்தோட்ட மக்களுக்கு இடவசதிகளை கொண்ட வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதென தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக, இந்திய அரசாங்கமும் இந்த வீட்டுத் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளது என்றார்.