‘நம்பிக்கையுடன் கல்வி நடவடிக்கைகளுக்கு மீண்டும் வருகை தாருங்கள்’

யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சகல தரப்பையும் உள்ளடக்கிய வகையில் வியாழக்கிழமை (04) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக உள்ளக மாணவர்களுக்கான சகல விதமான பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளபடியால், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வருகை தருமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர எல்லா மாணவர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாணவர்களுக்கிடையிலான கோஷ்டி மோதல் தொடர்பாக அரசாங்கம் ஆரம்பத்திலேயே கவலை வெளியிட்டிருந்ததோடு, இத்தகைய அசம்பாவித நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பதில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர மேலும் தெரிவித்தார்.