நரேந்திர மோடி அதிரடியாக ஏற்பாடு

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தில்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் கடந்த 13 நாள்களாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கி உள்ள விவசாயிகளின் பேராட்டத்தை முடிவுக்கு
கொண்டுவர மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் நடத்திய அடுத்தடுத்த பேர்ச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து
ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.