பக்க விளைவுகள் ஐந்து மடங்கு அதிகரிக்கும்

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளை விட கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியை டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி இதை தெரிவித்தார். தடுப்பூசியை பெறும் போது வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகளே ஏற்படும். மேலும், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது எனவும் டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.