பலாலியில் இந்திய விமானம் தரையிறங்கியது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு, இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் எயார் இந்திய அலைன்ஸ் விமானம் இன்று (15) வருகை தந்தது.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் நிறைவு பெற்று நாளை மறுதினம் (17) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான நிலையப் பணிகளை ஆராயும் பொருட்டு இன்று (15) நண்பகல் 12  மணியளவில் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு குறித்த விமானம் வருகை தந்துள்ளது.

இவ்வாறு வருகை தந்த குறித்த  விமானம் இன்று (15)  மாலை இந்தியாவிற்கு திரும்பிப் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.