பல்கலை கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட கல்விசாரா ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர் என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் மே மாதம் 2 ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென ஒன்றியத்தின்  இணைத்தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார். இதனால், பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தடைப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.