பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு

நாட்டில் உள்ள பல ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், ஆறுகளை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.