‘பிளாஸ்டிக் கூடை’ சட்டம் நடைமுறைக்கு வருகிறது

மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சட்டத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை, பொருளாதார மத்திய நிலையத்துக்கு விநியோகிக்கும் நடவடிக்கைக்கு மாத்திரம் பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது. இந்நிலையில், மரக்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், இம்முறையை பின்பற்றுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, விவசாயிகளிடம் கோரியுள்ளது.