புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் குழு இன்றும், நாளையும் யாழ் மாவட்டத்தில்

எனது நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி இன்றும், நாளையும் யாழ் மாவட்ட செயலகத்தில், இலங்கையின் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, தங்கள் அபிப்பிரயாங்களை சமர்ப்பித்துக் கொள்ளலாம் என்று வடமாகாண எதிர்கட்சித்தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் மறுசீரமைப்புக்காக மக்கள் கருத்தறியும் அமர்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பம். இன்று நடைபெற்ற அமர்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் பொதுச் செயலாளர் சுகு சிறீதரன்மற்றும் யாழ்மாவட்டப் பொறுப்பாளர் மோகன் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்