புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு

ஐரோப்பா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து, ஒரே பொருளாதார வலயத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் புதிய பொருளாதார வலயம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.

புதிய பொருளாதார வலயம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், உலகத்தில் இரண்டாவது பாரிய சந்தைக்குள் இலங்கைக்கு நுழைய முடியுமென அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

இந்த புதிய பொருளாதார வலயத்துக்குள் அமெரிக்க டொலர், யூரோ, சிங்கப்பூர் டொலர், இந்திய ரூபாய் மற்றும் சீன யூவான் ஆகிய சர்வதேச நாணயங்களைப் பயன்படுத்தி, நாட்டுக்குள் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய சந்தர்ப்பமும் கிட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.