போயிங்கின் 737 மக்ஸ் 8 பல நாடுகளால் தரையிறக்கம்

தங்களது விமானநிலையங்களுக்கு வரும், வெளியேறும் அனைத்து போயிங் 737 மக்ஸ் விமானங்களின் இயக்கங்களை சிங்கப்பூரும் அவுஸ்திரேலியாவும், நேற்று (12) இடைநிறுத்தியுள்ளன. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க நிறுவனமான போயிங்கின் புதிய விமானமான 737 மக்ஸ் ஆனது, ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது விபத்தைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தமது போயிங் 737 மக்ஸ் விமானங்களையும் இந்தோனேஷியாவும் சீனாவும் நேற்று முன்தினம் தரையிறக்கியிருந்தன,