போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸாரால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுப் பொலிஸாரால், நேற்று (08), AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, புதிய B அறிக்கையிலான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டத்தில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலரின் பெயரும் மதத்தலைவர்களின் பெயரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதியன்று, விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.