மக்களோடு மக்களாய்…

தம்பலகாமம் கோட்டத்திற்குற்பட்ட வளங்கள் குறைந்த பாலம்போட்டாறு சித்தி விநாயகர் வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கினங்க புலம் பெயர் தேசத்தில் உள்ள எமது தோழர்களின் நிதிப்பங்களிப்பின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி இடம் பெற்றது.இந்நிகழ்வில் எமது தோழர்களின் சார்பாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தேன். இந்நிகழ்வை பாடசாலை அதிபர் அவர்கள் தலமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களும் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.