மதுரை உச்சப்பட்டி முகாம் ஈழத் தமிழ் மக்கள் வெள்ள நிவாரண உதவி வழங்கினர்.

 

தமிழகத்தின் தெற்கே, மதுரை திருமங்கலத்துக்கு அண்மையில் இருக்கும் அகதிகள் முகாம் உச்சப்பட்டி.இந்த முகாமில் அண்ணளவாக 500 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள்.இவர்கள் இலங்கையில் எற்பட்ட உள்ளாட்டுப் போர் காரணமாக பல கட்டங்களாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தவர்களாகும்.
தமிழகத்தில் எற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கபட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்காக இந்த முகாமில் உள்ள தன்னார்வலர்கள் வழிகாட்டுதலில் முகாம் மக்களின் ஒத்துழைப்புடன், சேகரிக்கபட்ட அத்தியாவசியப் பொருட்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வெள்ள நிவாரண சேமிப்பு அலுவலகத்தில் 7.12.15 அன்று முகாம் மக்கள் சார்பாக முகாமில் உள்ள தன்னார்வலர்கள் வழங்கினர். முகாம் மக்கள் இந்த பொருட்கள் சேகரிப்பிகன் போது ஆர்வத்துடன் பொருட்களை வழங்கினர்.எங்களை ஆதரித்த தமிழக மக்களின் இன்னல்களின் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.