மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதியின் நீளம் 32 கிலோமீற்றர் எனவும், பயண நேரம் 25 நிமிடங்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மீரிகமவில் இருந்து பிரவேசித்து குருநாகல் அல்லது யக்கபிட்டியை விட்டு வெளியேறும் நான்கு சக்கர வாகனம் ஒன்றுக்கு 250 ரூபாயும், ஆறு சக்கர வாகனத்திற்கு 350 ரூபாயும், ஆறு சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனத்துக்கு 550 ரூபாயும் அறவிடப்படும் என அதிவேக நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.