மனது கேட்குதில்லையே இந்த வலிந்தெடுத்த மரணங்களை கேட்டும் போது

(சாகரன்)

சில தினங்களுக்க முன்பு எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்து தனது மிக நெருங்கிய உறவினர்… மைதுனி முறையானவர் கொரனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவ மனையில் மரணித்ததாக கூறினார். அவருக்கான ஆறுதலை சொல்லிவிட்டு தொடர்ந்தும் அவரின் பேச்சை செவி மடுத்தேன்.