மிகச் சிறந்த தோழரை இழந்து விட்டோம். சிரம் தாழ்த்தி செவ்வஞ்சலிகள்

தோழர் என வாஞ்சயுடன் என்னை அழைக்கும் தோழர் மோகன் சுப்பிரமணியம் நேற்று ( 07- 10-21) மௌனித்து விட்டார். தோட்டத் தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த தோழர் மோகன் 1975 இல் செங்கொடி சங்கத்தில் உறுப்பினராக இணைந்தவுடன் தொழிலாளர் வர்க்க சிந்த பனையில் ஈடுபாடு கொண்டு மறைந்த தோழர் ஓ.ஏ.இராமையாவின் உற்ற தோழனாக செயற்பட ஆரம்பித்தார்.